×

அன்னமங்கலம் கைகாட்டி அருகே வால் பட்டறையில் 10 அடி நீள மலைப்பாம்பு

பெரம்பலூர்: பெரம்பலூர், அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய எல்லைக்கு உட்பட்ட அன்னமங்கலம் கைகாட்டி பகுதியில் மணிவால் பட்டறை உள்ளது. இதில் நேற்று 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு, மர விறகுகளுக்கு இடையே இருந்தது தெரியவந்தது. இதை பார்த்து பயந்துபோன வால்பட்டறை ஊழியர்கள், பெரம்பலூர் தீயணைப்புத்துறை அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதைதொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள்துறை மாவட்ட அலுவலர் அம்பிகா உத்தரவின்பேரில் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) முருகன் தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் மாதேஷ், தனபால், வைத்தியலிங்கம் ஆகியோர் கொண்ட குழுவினர் அன்னமங்கலம் கைகாட்டிக்கு விரைந்து சென்று வால்பட்டறையில் விறகுகளுக்கு இடையே படுத்து கிடந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனத்துறை ஆலோசனைப்படி அருகில் உள்ள மலைப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

அன்னமங்கலம் கைகாட்டி பகுதிக்கு 500 மீட்டர் தொலைவிலேயே பச்சைமலை தொடர்ச்சி ஆரம்பிப்பதால் மலையிலிருந்து மலைப்பாம்பு வந்திருக்கலாம். அது கைகாட்டி பகுதி குடியிருப்புகளில் உள்ள பூனை, கோழி போன்றவற்றை சாப்பிட்டு விட்டு பட்டறையில் பதுங்கி இருந்திருக்கலாம் என அப்பகுதி வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : tail workshop ,handrail ,Annamangalam , Annamangalam, mountain snake
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...